மருத்துவப் படிப்புக்கான மாப்-அப் சுற்று கலந்தாய்வு முடிவில், இந்தியா முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 638 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 59% காலி இடங்கள் தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ளன.
பொது சுகாதாரப் பணிகள் இயக்குநரகம் மையப்படுத்தப்பட்ட மூன்று சுற்று கலந்தாய்வு நடத்திய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள ஒரு டஜன் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 378 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இது இந்த நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்களில் கிட்டத்தட்ட 15% இடங்கள் ஆகும். இவை இறுதியில் எப்படி நிரப்பப்படுகிறது?
தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள இடங்கள் அடுத்த 3 நாட்களில் அந்தந்த நிறுவனங்களால் நிரப்பப்பட உள்ளன. கடைசி சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படாத காலி இடங்களை நிரப்புவதன் மூலம் இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ 25 லட்சம் கட்டணமாக வசூலிக்கின்றன.
ஸ்ரீ பாலாஜி வித்யாபீடத்தின் கீழ் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 250 எம்.பி.பி.எஸ் இடங்களில் 184 இடங்கள் காலியாக உள்ளன. பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 62 இடங்களும், செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமியில் 32 இடங்களும் காலியாக உள்ளன.
மேலும், அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 53 எம்.பி.பி.எஸ் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. அரசு மருத்துவ கல்லுரிகளில் ஆண்டு கட்டணம் ரூ.13,610 வசூலிக்கின்றனர்.
ஏப்ரல் 4-ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை நிரப்புகிற கலந்தாய்வு சுற்றுக்கான முடிவுகளை கமிட்டி அறிவித்தது. “இந்த ஆண்டு வரை, முதல் இரண்டு சுற்றுகளில் இடங்கள் நிரப்பப்படாவிட்டால், மாநிலத் தேர்வுக் குழுவுக்கு இடங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில் சீட் மேட்ரிக்ஸில் இடங்களை சேர்க்கிறோம். அதைத் தாண்டி எங்களிடம் ஒரு இடமும் காலியாக இருந்ததில்லை. இந்த ஆண்டு, இந்த ஆண்டு மத்திய அரசு மற்றும் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் சுற்று மற்றும் மாப் அப் சுற்று கலந்தாய்வு நடத்தியது. இதற்கு பிறகு, ஏதேனும் காலி இடங்கள் இருக்கிறதா என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று மாநிலத் தேர்வுக் குழுச் செயலர் பி.வசந்தாமணி ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கலந்தாய்வுக் கமிட்டியின் கருத்துப்படி, பொது சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் கீழு உள்ள ஒரு பிரிவு, மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடத்தியது. மாப்-அப் சுற்று கலந்தாய்வு முடிவில் இந்தியா முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 638 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 59% இடங்கள் தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ளன.
மாப்-அப் சுற்று முடிந்த பிறகு மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கடைசித் தேதி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதே நாளில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த இடங்கள் மாற்றப்பட்டன. இந்த நிறுவனங்கள் பட்டியலிலிருந்து சேகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுடன் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 9 வரை கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் தெரிவித்துள்ளன.
மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி குழு 6,380 மாணவர்களின் பட்டியலை 1:10 விகிதத்தில் புதன்கிழமை காலிய் இடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அனுப்பியது. “மூன்று நாட்களுக்கும் குறைவாக இருப்பதால், இடங்களுக்கான போட்டி இருக்கும். கல்லூரிகள் முடிந்தவரை விரைவாக அவற்றை நிரப்ப விரும்பும், அதே வேளையில், பெற்றோர்களும் மாணவர்களும் கிடைப்பதை பெற்றுக்கொள்ள விரும்புவார்கள். இந்த ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்காது” என மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்தார். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் காலி இடங்களை நிரப்பும் சுற்றில் செய்யப்படும் ஒதுக்கீடுகளுக்கு மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி பொறுப்பாகாது என்று கூறியுள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளையும் வேறாக நடத்துவது குறித்து பெற்றோர்கள் பலரும் புகார் கூறுகின்றனர். “நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைகளை மத்திய அரசின் வரம்பிற்குள் கொண்டு வருவதன் நோக்கம், சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதாகும். ஒரு கல்லூரி அதன் 75% இடங்களை இறுதி சுற்றில் நிரப்ப அனுமதிக்கப்பட்டால், இதை எப்படி நியாயப்படுத்த முடியும்” என்று மருதுவப் படிப்பில் சேர காந்த்திருக்க்ம் ஒரு மாணவனின் பெற்றோர் கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“