வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, இலங்கையின் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்களுக்கு மே 12ம் தேதி வரை சிறை காவல் விதித்த நீதிமன்றம், ஜாமினில் செல்ல வேண்டுமென்றால் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என தெரிவித்தது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த மார்ச் 24ம் தேதி தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை ஏப்.,7ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்றுடன் (ஏப்.,7) சிறைக் காவல் முடிந்து மீண்டுமு் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் வரும் மே 12ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஜாமினில் செல்ல வேண்டுமென்றால் 12 மீனவர்களும் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Advertisement