தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!

முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மாநிலத்தின் வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை அதிகரிக்கப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள் சென்னையில் அலுவலகத்தைத் திறந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பிரிவாக விளங்கும் ஸ்டார்ட்அப் துறையின் மீது தமிழக அரசு தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

டான்சிம் அமைப்பு

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (டான்சிம்) 2026 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குறைந்தது 10,000 ஸ்டார்ட்அப்-களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது என்று டான்சிம் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தெரிவித்தார்.

10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட டான்சிம், தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நோடல் ஏஜென்சியாகும். தற்போது தமிழ்நாட்டில் புதிய முதலீட்டாளர் சூழல் அமைப்பை மேம்படுத்த புதிய ஸ்டார்ட்-அப் கொள்கையை உருவாக்கி வருகிறது இந்த அமைப்பு.

80 இன்குபேஷன் சென்டர்
 

80 இன்குபேஷன் சென்டர்

டான்சிம் அமைப்புத் தற்போது தமிழகத்தில் உள்ள 80 இன்குபேஷன் மையங்களில் கவனம் செலுத்தி அவற்றை உரியச் சந்தைகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 ஸ்டார்ட்அப் டேட்டா பேஸ்

ஸ்டார்ட்அப் டேட்டா பேஸ்

மேலும் டான்சிம் அமைப்பு ஸ்டார்ட்அப் டேட்டா பேஸ் உருவாக்குவதோடு, வழிகாட்டி வலையமைப்பையும் உருவாக்க முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஸ்டார்ட்-அப்கள் உள்ளன, அவற்றின் நிதி விவரங்கள் மற்றும் அவை எந்தெந்த துறைகளில் அங்கம் வகிக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் பணிகளைச் செய்ய உள்ளது.

கொள்கை அளவில் தளர்வுகள்

கொள்கை அளவில் தளர்வுகள்

இந்தத் தகவல்கள் மூலம் அரசு இந்தப் பிரிவுக்குக் கொள்கை அளவில் தளர்வுகள் அளிக்க வேண்டும், தத்தம் துறைகளுக்கு எப்படி முதலீட்டையும், முதலீட்டாளர்களையும் அழைத்து வருவது. மேலும் ஸ்டார்ட்அப் துறையை அடிப்படையாக வைத்து பள்ளி கல்லூரி அளவில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வரவும் முடியும்.

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

சென்னை, கோவையைத் தாண்டி ஈரோடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுப்பட்டு உள்ளதாகத் தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துக் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamil Nadu big Target; More than 10,000 startups to create by 2026: TANSIM

Tamil Nadu big Target; More than 10,000 startups to be created by 2026: TANSIM தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.