சென்னை: தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ. (XE Variant) வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று உலக சுகாதார நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள, குழந்தைகள் சமூக நல நிலையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா அடிக்கல் நாட்டு விழாவும் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைவரும் “சுகாதாரத்தினை கடைப்பிடிப்போம்” என்ற உறுதி மொழியினை ஏற்றனர். அதையடுத்து ஸ்டாலின் வளாகத்தில் அமைச்சர்கள் மரக்கன்று நட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ(XE) வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்பட வில்லை. பொதுமக்கள் மக்கள் கூடும் இடங்களில் முக்கவசம் அணிவது நல்ல என்று கூறியவர், அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.