உக்ரைன் நகர மேயர் ஒருவர் தாய் நாட்டிற்கு துரோகமிழைத்து குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பியோடியதாக கார்கிவ் கவர்னர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், உக்ரைனின் மரியுபோல் உட்பட பல பகுதிகளிலிருந்து உக்ரேனியர்களை வெளியேற்றிய ரஷ்ய படைகள், அவர்களை ரஷ்ய நகரங்களுக்கு நாடு கடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் Balakliia மேயர் Ivan Stolbovyi குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பியோடியுள்ளதாக கார்கிவ் கவர்னர் Oleh Synehubov தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை விட்டு வெளியேறி மீண்டும் நாடு திரும்பும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள்!
BalaKliia மேயர் மீது நியாயமாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என Synehubov தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்ய படைகளுடன் Ivan Stolbovyi ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக Synehubov குற்றம்சாட்டியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.