திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட ஐந்து மதுபான கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், இது சம்பந்தமாக மூன்று பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இந்த ஐந்து மதுபான கடைகளுக்கு சீல் வைத்து, திருவாரூர் டாஸ்மாக் மேலாளர் மற்றும் மதுவிலக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருத்துறைப்பூண்டி, மாங்குடி, நடு கலப்பால், மடப்புரம், சேமங்கலம் ஆகிய 5 பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான பற்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக மூன்று பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் ஒரு அண்மைய செய்தி : செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயிலில் அடிபட்டு சற்று முன்பு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
செட்டிபுண்ணியம், அன்பு நகர் ரயில்வே கிராசிங்கில், ரயிலில் அடிபட்டு இறந்த மூன்று பேர் குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டதில், மின்சார ரயில் மோதி மோகன், பிரகாஷ், அசோக் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மது அருந்திவிட்டு, வீடியோ பதிவு செய்த போது, மின்சார ரயில் மோதியதில் மோகன், பிரகாஷ், அசோக் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில்வே கிராசிங்கில் மூன்று பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது