தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள கோரிக்கை

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது சிறுவர்களை ஈடுபடுத்துவதை சிறுவர்களை ஈடுபடுத்துவதை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறுவர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதனால், அவர்கள் காயங்கள் அல்லது உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1991 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் உயரிய நலன் கருதி செயற்பட கடமைப்பட்டுள்ளனர் என்று இந்த சாசனத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.