தமிழகத்தில், தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் காலணி தொழிற்சாலை, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தைவான் நாட்டை தலைமை இடமாகக் கொண்ட ஹாங் பு நிறுவனம், தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும், காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம், முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்கிறது எனவும், இந்த ஒப்பந்தம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், குறிப்பாக பெண்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமத்துடன் ரூ. 1000 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. pic.twitter.com/TA77Tnv1oO
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 7, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM