மன்னார் வளைகுடா மற்றும் உள் தமிழகப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பதாக தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.