வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது தேசிய தேர்வு முகமை.
இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் எனப்படும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பிரிவினரும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.100 -ஐ அதிகமாக கட்ட வேண்டும். பொது பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், இ.டபிள்யூ.எஸ், மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800- ல் இருந்து 900 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைத்து பிரிவினருக்குமான கட்டணமாக ரூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன்வழி கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட கட்டணங்களை தேர்வர்கள் தனியே செலுத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Advertisement