பணம் கொடுத்ததில் தகராறு; மகன் மீது தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை – பதறவைக்கும் காட்சிகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணத்தகராறு காரணமாக மகன் மீது நெருப்பு வைத்த தந்தை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் சாம்ராஜ்பேட் பகுதியில் வசித்து வருபவர் தொழில் அதிபர் பாபு என்கிற சுரேந்திர குமார். 51 வயதான இவர், தனது உலோகம் சார்ந்த தொழிலை நிர்வாகிக்கும் பொறுப்பை 25 வயதான தனது மகன் அர்பித் சேட்டியாவிடம் வழங்கியிருந்தார். தொழிலுக்காக தனது மகனுக்கு அவர் சுமார் 1.5 கோடி ரூபாய் வழங்கி இருந்தார். அவர் வழங்கிய பணம் குறித்த கணக்குகளை தனக்கு தரும்படி பல முறை தந்தை சுரேந்திர குமார், மகன் அர்பித் சேட்டியாவிடம் கேட்ட போது, அதற்கு அப்ரித் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
image
இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை சுரேந்திர குமார், தனது மகன் அர்பித் சேட்டியா மீது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பெயின்ட் தின்னர் ரசாயனத்தை ஊற்றி அதன் பிறகு நெருப்பு வைத்துள்ளார். மகன் தீ பிடித்து அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மகன் தற்பொழுது வரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, நெருப்பு வைத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.