ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் 2 மகள்களுக்கு எதிராக பொருளாதார தடையை அறிவித்துள்ளது அமெரிக்கா. இந்த இருவரும்தான் புடினின் பெருமளவிலான சொத்துக்களை நிர்வகிப்பதாக
அமெரிக்கா
சந்தேகிக்கிறது. இதனால்தான் இந்தத் தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை சுமத்தியது. அடுத்தடுத்து தொடர்ந்து பல தடைகளை அது சுமத்தியபடியே உள்ளது. இருப்பினும் இந்த நெருக்கடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போரையும் அது நிறுத்தவில்லை.
இந்த நிலையில், தற்போது புதிதாக 2 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் மகள்கள் காத்தரினா விலாடிமிரோவ்னா டிக்கனவோ மற்றும் மரியா விலாடிமிரோவ்னா வொரன்ட்சோவா தான் அவர்கள். இவர்கள்தான் புடினன் பெருமளவிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறார்கள் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. காத்தரினா தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றுகிறார். ரஷ்ய அரசுக்கும், அதன் பாதுகாப்புத்துறைக்கும் ஆலோசகராக செயல்படுகிறார்.
“காரை வித்தாச்சு.. குமுட்டி அடுப்புக்கு மாறியாச்சு”.. கடைசில கஸ்தூரி நிலைமை இப்படி ஆயிருச்சே!
இன்னொரு மகளான மரியா, அரசு நிதியுதவி செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவர் மரபியல் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். அதற்கு ரஷ்ய அரசு மிகப் பெரிய அளவில் நிதியுதவி செய்கிறது. இந்த இருவரும் புடினின் சொத்துக்களை நேரடியாக கையாளுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இவர்களுக்கு மட்டும்தான் புடினின் சொத்து விவரங்கள் தெரியும் என்றும் அமெரிக்கா நம்புகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், புடினின் ரகசியச் சொத்துக்கள் குறித்த விவரங்கள் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் அவரது குடும்ப உறுப்பினர்களை குறி வைத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்று கூறினர். அமெரிக்க தடை குறித்து
புடின் மகள்கள்
தரப்பில் எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
புடினின் மகள்கள் குறித்த வித்தியாசமான தகவலும் உண்டு. இரு மகள்களுமே புடினை தங்களது தந்தையாக ஒருபோதும் பகிரங்கமாக கூறிக் கொண்டதில்லை. மேலும் தனது மகள்கள் குறித்து புடினும் கூட பகிரங்கமாக எந்தக் கருத்தையும் கூறியதில்லை.
யார் இந்த அல் ஜவாஹிரி?.. இந்தியாவில் நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்.. முஸ்கான் தந்தை அதிரடி
29 வயதான காத்தரினாவின் கணவர் பெயர் கிரில் ஷாமலோவ். இவர், புடினின் நீண்ட கால நண்பர் நிக்கோலாய் ஷாமரோவின் மகன் ஆவார். கிரில், காத்தரினாவுக்கு பல கோடி மதிப்புள்ள தொழில் நிறுவனங்கள் உள்ளன. மூத்த மகள் மரியா மருத்துவம் படித்தவர் ஆவார். இவர் ஆய்வுகளில்தான் அதிக கவனம் செலுத்துகிறார். இவரது கணவர் பெயர் ஜோரிட் ஜூஸ்ட். இவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
புடின் மகள்கள் தவிர, வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவரோவின் மகள் மற்றும் மனைவி ஆகியோர் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதுதவிர ரஷ்யாவில் முதலீடு செய்துள்ள அமெரிக்கர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்ய நிதி நிறுவனங்கள், ரஷ்ய அதிகாரிகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புடினின் சொத்துக்கள் குறித்த எந்த விரிவான தகவலும் யாரிடமும் இல்லை. ரஷ்யாவிலேயே அதுகுறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. கருங்கடல் பகுதியில் அவருக்குப் பிரமாண்டமான மாளிகை உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் புடின் இல்லை என்று கிரம்ளின் கடந்த ஆண்டு மறுத்தது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் நவ்லானி இந்த மாளிகை குறித்த ஒரு வீடியோவைப் போட்டபோது அது வைரலானது.