இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியிலும், பொருளாதார சரிவில் உள்ளது. இதற்கிடையில் இரு நாடுகளிலும் அரசு நிலையற்ற தன்மையில் உள்ளது மிகவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி இன்று தனது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் நாட்டின் வட்டி உயர்வு முடிவு வெள்ளிக்கிழமை நாணய கொள்கை முடிவுகளை வெளியிடக் காத்திருக்கும் ஆர்பிஐ முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) ஏப்ரல் 7ஆம் தேதி, தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் அதாவது வங்கிகளுக்கு வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் அடிப்படை வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 12.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான்
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் திடீரென கூட்டப்பட்ட நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) அவசர காலகட்டத்தின் அடிப்படையில் இக்கூட்டத்தில் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 12.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
கடந்த நாணய கொள்கை கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து அதிகரித்துள்ளது என பாகிஸ்தான் மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு
இதை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்தது உள்ளது. இதனுடன் பொருளாதாரம் சரிவின் காரணமாகப் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
முக்கிய பிரச்சனை
இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் போர், சீனா கொரோனா தொற்று, அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, சப்ளை செயின் பாதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை பாகிஸ்தானை மேலும் பாதித்துள்ளது.
Pakistan raises benchmark interest rates by 250 bps to 12.25 percent
Pakistan raises benchmark interest rates by 250 bps to 12.25 percent பாகிஸ்தான் எடுத்த முடிவு.. மக்கள் கவலை..!