IPL 2022 Memes tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா அச்சம் இன்னும் நிலவி வருவதால், அதை தவிர்க்கும் வகையில் இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இவையனைத்தும் இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் ‘ஐபிஎல்’ மீம்ஸ் குறித்து பார்க்கலாம்.
‘ஐபிஎல்’ 2022 மீம்ஸ்:
மும்பை அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்:
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் மும்பை அணி படுதோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளார் பாட் கம்மின்ஸ் டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில் 6,4,6,6,2,4,6 என ரன் மழை பொழிந்து வான வேடிக்கை காட்டினார். அத்துடன் ஆட்டத்தையும் முடித்து வைத்தார்.
கம்மின்ஸின் இந்த ருத்தர தாண்டவ ஆட்டத்தால் 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 162 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்தது கொல்கத்தா. மேலும், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இந்த நிலையில், நெட்டிசன்கள் இது குறித்து சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர் .
சென்னை அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்து இருந்தது. அணியின் தோல்விக்கு அதிகமான பனிப்பொழிவு தான் காரணம் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இது குறித்த மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.
சென்னை – மும்பை வைரல் மீம்ஸ்:
ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்ற சென்னை – மும்பை அணிகள் தொடர்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளன. மேலும், புள்ளிப்பட்டியலில் சென்னை 8வது இடத்திலும், மும்பை 9வது இடத்திலும் உள்ளன. இதை கலாய்க்கும் விதமாக மீம்ஸ்கள் பதிவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“