வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லி.யை கலைக்குமாறு துணை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏப். 9-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதன் மீது, 3ம் தேதி பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது
இந்நிலையில், இத்தீர்மானத்தை நிராகரித்து, துணை சபாநாயகர் காசிம் கான் சுரி உத்தரவிட்டார். அடுத்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று, பார்லிமென்டை கலைத்து, அந்த நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி உத்தரவிட்டார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை வந்த போது, எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிகளின் சார்பில், வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இதையடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, பார்லிமென்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளதாவது: பார்லிமென்டடில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநயகர் நிராகரித்து பார்லியை கலைக்க உத்தரவிட்டது சட்டவிரோதமானது.
எனவே பார்லிமென்ட்டை கலைத்தது செல்லாது. பாராளுமன்றம் மீண்டும் செயல்பட வேண்டும். வரும் 9-ம் தேதி நம்பிக்கை ஒட்டுடெடுப்பு நடத்த வேண்டும். பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவும் செல்லாது. இவ்வாறு தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு இம்ரான் கானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என பாக். அதிபரின் முடிவுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement