தமிழ், சிங்கள புத்தாண்டை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் 15 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக செயல்படும் இந்த விசேட பஸ் சேவை, பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவர்கள் மீண்டும் திரும்புவதற்கும் பஸ் சேவைக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு பஸ்தியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்திற்கு மேலதிகமாக கடவத்தை, கடுவெல மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையங்களிலும் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பஸ்களுக்கு டீசல் கிடைக்காவிட்டால் புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.