சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து
பொதுத்தேர்வு
க்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பாட அளவு கணிசமாக குறைக்கப்பட்டது.
அதன்படி 10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம் என்ற விகிதத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
10-ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2
பொதுத்தேர்வு
க்கு இன்னும் 1 மாதமே இருக்கும்நிலையில் பல அரசுப்பள்ளிகளில் பாடங்கள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிரமங்களை சந்தித்து வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்
பொதுத்தேர்வு
க்கு நடத்தி முடிக்கப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ‘நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கக்கூடாது என்பது தான் நியாயமானது. கண்டிப்பாக அதை கவனத்தில் கொள்வோம்’ என்று பதில் அளித்தார்.
இதையடுத்து ஏற்கனவே குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள பாட அளவின் அடிப்படையிலேயே
பொதுத்தேர்வு
நடைபெறும் என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-22-ம் கல்வியாளர்களுக்கான குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. அந்த பாடங்கள் அடிப்படையிலேயே
பொதுத்தேர்வு
க்கான கேள்வித்தாள் வழங்கப்படும்.
எனவே பொதுத்தேர்வுக்காக குறைத்து அறிவிக்கப்பட்ட அனைத்து பாடங்களையும் விரைந்து முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்கள் பள்ளிகளின் பார்வைக்காக தற்போது மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.