பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.