வாஷிங்டன்:
அமெரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது, ‘இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இலங்கையில் தினமும் அதிகநேரம் மின்தடை உள்ளது. பொது போக்குவரத்து சீராக இல்லை.
இதனால் அங்குள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்களில் அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு போட்டிகள், கல்வி நிலையங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களை குறிவைத்து சிறிய அல்லது எச்சரிக்கையின்றி பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரித்துள்ளது.