புதுடில்லி: மின்சாரத்துறை சீர்திருத்த பணிகளுக்காக தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களான உ.பி.,க்கு ரூ.6,823 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.5,186 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா – ரூ.3,716 கோடி, ஒடிசா – ரூ.2,725 கோடி, அசாம் – ரூ.1,886 கோடி, ஹிமாச்சல் பிரதேசம் – ரூ.251 கோடி, மேகாலயா – ரூ.192 கோடி, சிக்கிம் – ரூ.191 கோடி, மணிப்பூர் – ரூ.180 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுடில்லி: மின்சாரத்துறை சீர்திருத்த பணிகளுக்காக தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.