முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய கேரள வழக்கறிஞர் நெடும்பாரா என்பவரை நீதிமன்றத்தைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில், தமிழ்நாடு கேரளம் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவையும் கேரளா மதிப்பதில்லை. மேலும் தமிழக அரசுஅதிகாரிகள் அணையை ஆய்வு சென்றால், அவர்களையும் விடுவதில்லை. ஏட்டிக்குப்போட்டியாக கேரள அரசு நடந்துகொள்வது இந்த பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலாக்கிக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பலமுறை கேரள அரசுக்கு அறிவுறுத்தியும், கேரள முதல்வர் பினராயி விஜயன் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லை பெரியா அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை என தமிழக அரசு தெரிவித்தது.  உச்சநீதி மன்றம் அமைத்த மேற்பார்வை குழு முல்லை பெரியாறு மேற்பார்வை குழு எங்களுக்கான வேலைகளை அணையில் செய்ய அனுமதித்துள்ளது. ஆனால், கேரள அரசு மேற்பார்வை குழு ஆணையை மதிப்பதில்லைஎன  தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  அப்படி என்றால் அதை நீங்கள் மேற்கொள்ள வேண்டியது தானே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குபதில் அளித்த தமிழகஅரசு வழக்கறிஞர், எங்களை அனுமதிக்க கேரள அரசு முட்டுகட்டை போடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அணை பாதுக்காப்பு குறித்து பிரச்சனை செய்கிறார்கள் என்று கூறியது.

இதற்க கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய அணை கட்டுவது தொடர்பாக பேசத்தொடங்கினார்.

இதையமுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  முல்லை பெரியாறில் புதிய அணை அமைப்பது குறித்து யாரும் இப்போது பேச வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்ததுடன்,  தற்போது இருக்க கூடிய அணையின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து மட்டும் கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கேரளா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடும்பாரா என்பவர்,  முல்லை பெரியாறு மேற்பார்வை குழு &உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீது கடுமையான முறையில் வாதங்களை முன்வைத்தார். இது நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலும், மாண்பை குலைக்கும் வகையிலும் இருந்தது.

இதனால் கோபமடைநத் நீதிபதிகள், உங்களைப் போன்றவர்களுடைய அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை, உடனே நீதிமன்றத்தை விட்டு வெளியேறுங்கள் என கேரளாவைச்சேர்ந்த வழக்கறிஞர் நெடும்பாராவை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.