டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த வழக்கில் மேற்பார்வை குழுவின் தலைவரை மாற்றக்கூடிய சூழல் இல்லை என கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேற்பார்வை குழுவில் மாற்றம் வேண்டும் என கேரளா பிடிவாதம் பிடிப்பது ஏன் என புரியவில்லை? என்று கூறிய நீதிபதிகள், புதிய குழு அமைத்தால் அந்தக் குழு முழு விவரங்களை அறிந்துக்கொள்ள காலமாகும் எனவும் தெரிவித்தனர்.