டெல்லி: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் மேற்பார்வைக் குழுவே முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கேரளா அரசை பொறுத்தவரை முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி மனுதாக்கல் செய்து வருகிறார்கள். கேரள மாநிலத்தை சேர்ந்த தனிநபர்களும் அதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்து வருகின்றனர்.இதில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், அந்த அணைக்கு பதிலாக வேறுஒரு அணையை கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை கேரள அரசு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த தனிநபர்கள் வலியுறுத்திவரும் நிலையில் மேற்பார்வை குழுவின் தன்மை குறித்த முக்கியமான சந்தேகங்களை கேரளா அரசு எழுப்பியுள்ளது. அதற்க்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு என்பது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, அந்த குழுவின் அதிகாரத்தை இன்னும் அதிகரிப்பது சம்பந்தமான விசயங்களில் வேண்டுமானால் நாம் கவனம் செலுத்தலாமே தவிர, அணையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லாமல் வீணான சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் என கேரள அரசுக்கும், கேரள மாநிலத்தை சேர்ந்த மனு தாரர்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த அணையின் அளவை உடனடியாக நீதிபதிகளே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபொழுது கடுமையான கோபமடைந்த நீதிபதிகள் அணையின் நீர்மட்டம் குறைப்பு, அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விசயங்களிலும் முடிவெடுக்க கூடிய அதிகாரம் என்பது இந்த மேற்பார்வை குழுவிற்கே உள்ளது, இது தொடர்பான முடிவுகளை இரப்பார்வை குழு எடுக்கும் என கூறி, வழக்கின் முக்கிய உத்தரவு நாளை பிறப்பிக்கபடும் என தெரிவித்துள்ளனர். இதில் கேரளா அரசின் பின்னடைவு என்பது அவர்கள் இந்த மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க வேண்டும், இந்த குழுவின் தலைவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். கேரள அரசின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள அரசின்கொருக்கைகள் நிராகரிக்கப்பட்டது என்பது தமிழகத்திற்கு மிக சாதகமாக அமைகிறது. ஏனென்றால் மேற்பார்வைக் குழு தொடர்சியாக முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலை நாட்டி வருகின்றனர்.