மூளை தாறுமாறா வேலை செய்யும்.. கனடாவில் பரவும் "ஸோம்பி" வியாதி!

அமெரிக்காவில் மட்டும் இதுவரை இருந்து வந்த விலங்குகளிடையே பரவும்
ஸோம்பி வியாதி
தற்போது கனடாவுக்கும் பரவியுள்ளது.

The Chronic Wasting Disease.. இதுதான் இந்த வியாதியின் பெயர். இதை ஸோம்பி வியாதி என்றும் சொல்கிறார்கள். இந்த வியாதி மான்களிடையே பரவும் நோயாகும். அமெரிக்காவில்தான் இது அதிக அளவில் இருந்து வந்தது. 60களில் கண்டறியப்பட்ட வியாதி இது. இந்த வியாதி தாக்கும் மான் விரைவிலேயே மரணமடைந்து விடும். இந்த நோயைக் குணப்படுத்த மருந்தோ, தடுப்பு மருந்தோ எதுவும் கிடையாது.

அமெரிக்காவில் 26 மாகாணங்களில் இந்த நோய் உள்ளது. இந்த நிலையில் தற்போது கனடாவுக்கும் இது பரவியுள்ளது. இந்த நோய் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் இதுவரை மனிதர்களுக்கு இந்த வியாதி பரவியது தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை. அதேசமயம், இது மனிதர்களுக்குப் பரவாது என்பதற்கான ஆதாரமும் இல்லை.

இந்த நோய் தாக்கிய விலங்கின் இறந்த உடலிலிருந்து இது மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இதுவரை யாரும் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டதாக ஆவணம் இல்லை. நோய் பாதிக்கப்பட்ட மானின் பிரியான் புரதத்திலிருந்துதான் இந்த வியாதி பரவுகிறது. இந்த வியாதி தாக்கினால் மூளை தாறுமாறாக செயல்படும்.

பதுங்கிக் கிடக்கும் சொத்துக்கள்.. “புடினின் 2 மகள்கள்”.. குறி வைத்த அமெரிக்கா.. தடை!

மூளை செயல்பாடு பாதிக்கப்படுவதால் செய்யும் செயல்களில் ஒருங்கிணைப்பு இருக்காது. வாயிலிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும். அதிக அளவில் சிறுநீர் வெளியேறும். உடல் எடை குறையும்.. கடைசியில் மரணம் சம்பவிக்கும். கிட்டத்தட்ட ஸோம்பி போல நோய் பாதிக்கப்பட்ட விலங்குகள் செயல்பட ஆரம்பிக்கும் என்பதால் இதற்கு ஸோம்பி நோய் என்று பெயர் வந்தது.

இந்த நோய் காரணமாக வேட்டைக்காரர்களுக்குத்தான் ஆபத்து அதிகம். காரணம், வேட்டையாடும்போது இந்த நோய் தாக்கிய மான்களின் இறந்த உடலிலிருந்து இந்த நோய் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதுவரை இந்த நோய் மனிதர்களுக்குப் பரவவில்லை என்ற போதிலும் கூட கவனமாக இருப்பது நல்லது என்பது அவர்களின் கருத்தாகும்.

ஏற்கனவே கொரோனா வலம் வந்து உலகையே உலுக்கியது.. இப்போது இந்த ஸோம்பி வியாதியும் மனிதர்களுக்குப் பரவினால்.. நல்லாதான் இருக்கும்.. மனிதர்களை விட்டுடுங்கப்பா நோய்களா.. பாவம் நாங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.