டெல்லி: ரயில்களில் WI-FI வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாக ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தொடங்கி, பிப்ரவரி 1-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-ல் நிறைவடைந்தது.மேலும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளை ஆராய இடைவெளி விடப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மாா்ச் 14-ல் தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை கூட்டத்தொடா் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருநாள் முன்னதாகவே பட்ஜெட் தொடர் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், இன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், தற்போது 100 கி.மீ. அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான் ரயில்களுக்குள் WI-FI வசதி வழங்க முடியும் என்று பதில் அளித்துள்ளார்.