ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் ஆசிரியரும், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற டிமிட்ரி முரடோவ் வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றால் தாக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையான நோவயா கெஸெட்டாவின் ஆசிரியரும், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவருமான டிமிட்ரி முரடோவ் கடந்த 7ம் திகதி மொஸ்கோவ்வில் இருந்து சமாரா நோக்கி ரயிலில் சென்றபோது வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றை கொண்டு அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டெலிகிராம் செய்தித்தாளில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில், அவரது தலை, சட்டை, கைகள், ரயிலில் அவரது இருப்பிடம் மற்றும் அவரது உடைமைகள் என அனைத்தின் மீதும் சிவப்பு நிற சாயம் ஊற்றப்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது.
“They poured oil paint with acetone in the compartment. My eyes are burning terribly. A train from Moscow to Samara. Oil smell all over the carriage. I’ll try to wash myself. He shouted: “Muratov, here’s one for our boys”, the head of Novaya Gazeta said. pic.twitter.com/DmWFPJFued
— NEXTA (@nexta_tv) April 7, 2022
இதையடுத்து, இந்த தாக்குதல் குறித்து நோவயா கெஸெட்டாவின் புதிய ஐரோப்பிய பதிப்பில் அவர் பேசுகையில், அடாவடிகாரர்களின் குழுவில் இருந்த ஒருவன் தன்னை நோக்கி வந்து இதோ நமக்காக முரடோவ் இருக்கிறார் என அவரது குழுவினரிடம் கத்தினார்.
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில், எனது உடல் முழுவதும் வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றால் தாக்கப்பட்டேன், அப்போது எனது கண்கள் மிகவும் எரிந்ததாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு, ரஷ்ய அதிகாரிகளால் நோவயா கெஸெட்டா பலமுறை எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த செய்திநிறுவனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்…நேட்டோவை கைவிடுங்கள்: பின்லாந்தை எச்சரித்த ரஷ்யா!