ஜெனீவா:ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
உக்ரைன் தலைநகரான கீவை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ரஷ்யா தன் படைகளை திரும்ப பெற்ற போது, அங்குள்ள பொதுமக்களை ரஷ்ய வீரர்கள் சுட்டு கொன்றனர் என குற்றம் சாட்டப்பட்டது.குறிப்பாக புச்சா நகரில் இந்த படுகொலை நடத்தப்பட்டதாக கூறப்பட்டு, அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், உக்ரைனின் புச்சா நகரில் கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்யாவை, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.இத்தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 93நாடுகளும், எதிராக 24 நாடுகளும் ஓட்டளித்தன. இந்தியா உட்பட 58 நாடுகள், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.ஐ.நா., மனித உரிமை கவுன்சில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது.
Advertisement