ரஷ்யா மீதான எரிசக்தி தடைகளுக்கான பரிந்துறைகளை நாடு ஆதரிக்கவில்லை என்று ஹங்கேரியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புடினின் இரண்டு மகள்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்ய வங்கி மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது.
இதனிடையே, ரஷ்ய நிலக்கரி மீதான பரிந்துறைக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்கும் பணியில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அணு சக்தி தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தடைகளை விதிப்பதை ஹங்கேரி ஏற்காது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Peter Szijjarto தெரிவித்துள்ளார்.
புச்சாவில் பொதுமக்களை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்ட ரஷ்யா! முக்கிய ஆதாரத்தை கைப்பற்றிய ஜேர்மனி
சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து ஹங்கேரி தனது அணுமின் நிலையத்திற்கான புதிய எரிபொருளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ரஷ்யாவின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் ரஷ்ய எரிவாயுக்கு ரூபிள்களில் பணம் செலுத்த தயாராக இருப்பதாக ஹங்கேரி அறவித்துள்ளதை உக்ரைன் விமர்சித்துள்ளது.