லோக்சபா மற்றும் ராஜ்யசபா திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதனால், பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த கூட்டத் தொடரில்,ராஜ்யசபாவில் 99 சதவீத அலுவல்கள் நடந்ததாக, அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜன., ௩௧ம் தேதி முதல், பிப்., ௧௧ வரை நடந்தது. பிப்., ௧ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, கடந்த மாதம் ௧௪ல் துவங்கியது. ஏப்., ௮ வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. புதிய மசோதாக்கள்இந்நிலையில், நேற்று காலை லோக்சபா கூடியதும், சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது:முந்தைய கூட்டத் தொடர்களோடு ஒப்பிடுகையில், சபை அலுவல்கள் மன நிறைவுடன் நடந்து முடிந்துள்ளன.
குறிப்பாக, இந்தக் கூட்டத்தொடரில், சபையின் ஒவ்வொரு உறுப்பினரும், அலுவல்களில் ஏதாவது ஒருவகையில் பங்கேற்றது மகிழ்ச்சிஅளிக்கிறது.இவ்வாறு கூறிய அவர், சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.ராஜ்யசபா காலையில் கூடியதும், சிவசேனா எம்.பி.,க்கள், சபையின் நடுவே கூடி அமளியில் இறங்கினர்.காங்., மற்றும் திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்களும், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தாமல், சபையை முடிப்பது ஏன்’ என கேள்வி எழுப்பினர்.”இதற்கு நான் பொறுப்பல்ல. சபையில் கூச்சலும் குழப்பமும் விளைவித்தவர்களே பொறுப்பு,”என கூறிய ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, ”சபையின் கடைசி நாளில், எந்த எம்.பி., மீதும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை,” என்றார்.பின், சபையை கால வரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தொடரில், மொத்தம் 13 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குற்றவியல் சட்டத்திருத்த மசோதா, டில்லி மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட, 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.அடுத்து, மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.சூழ்நிலைகளுக்கு ஏற்ப, ஜூலை, மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில், இந்த கூட்டத்தொடர் நடத்தப்படலாம்.
99.8 சதவீத செயல்பாடு
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், ராஜ்யசபா 99.8.௮ சதவீதம் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி, அவர்கள் கூறியதாவது:பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், ராஜ்ய சபாவில், மொத்தம் ௨௯ அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இதில், 27 அமர்வுகள் நடந்தன. இதில், முதல் கட்ட கூட்டத் தொடரில் ௧௦ அமர்வும், இரண்டாம் கட்ட கூட்டத்தொடரில் ௧௭ அமர்வும் நடந்தன. ஹோலி பண்டிகை காரணமாக, ஒரு அமர்வு நடக்கவில்லை.
ராம நவமி பண்டிகை காரணமாக, ஒருநாள் முன்னதாகவே, பார்லி., கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இம்முறை, பட்ஜெட் கூட்டத்தொடர் சிறப்பாக துவங்கியது.முதல் ௧௨ நாட்கள், எந்தவித இடையுறும் இன்றி, சபை முழுமையாக செயல்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், இதுவே சிறப்பான தொடராக அமைந்து உள்ளது.
மேலும், இந்த கூட்டத்தொடரில் தான், ராஜ்யசபா ௯௯.௮ சதவீதம் செயல்பட்டுள்ளது.எம்.பி.,க்கள் ௧௧ நாட்கள் கூடுதல் நேரம் பணியாற்றினர். ௨௭ அமர்வுகளில், ௨௧ அமர்வுகள் எந்த வித ஒத்திவைப்பும் இன்றி, முழுமையாக செயல்பட்டன.ராஜ்யசபா ௧௨௭ மணி நேரம் செயல்பட்டது. அமளியால், ௯ மணி நேரம் பாதிக்கப்பட்டது. ஆனால், உறுப்பினர்கள் 9 மணி நேரம் கூடுதலாக பணியாற்றி, இதை ஈடுகட்டி விட்டனர். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்
பிரதமர் மோடி ஆலோசனை
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சிலரை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோரை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.அப்போது, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனிருந்தனர்.