லடாக் மின்தொகுப்பில் இடையூறு ஏற்படுத்தச் சீன ஹேக்கர்கள் செய்த முயற்சியை இந்தியா முறியடித்துள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் மின்வழங்கலில் இடையூறு ஏற்படுத்தச் சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஆகஸ்டில் ஒருமுறையும், மார்ச்சில் ஒருமுறையும் என இணைய வழியில் இருமுறை முயற்சி மேற்கொண்டதாக அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
மின் தொகுப்பில் உள்ள இணையப் பாதுகாப்பு முறையை ஏற்கெனவே வலுப்படுத்தியுள்ளதால், சீனாவின் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மின்தொகுப்பை ஹேக்செய்து மின்வழங்கலைச் சீர்குலைக்கச் சீனா சதி செய்யக் கூடும் என்பதால், மின்துறையில் சீனப் பொருட்களை வாங்க 2 ஆண்டுகளாக மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.