
‛வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' – ‛மாநாடு' பட டயலாக் படமாகிறது
சிம்பு நடித்த ‛மாநாடு' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும் ‛வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பிட்டு' என்ற வசனம் பிரபலம். இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் வந்தன. இப்போது இதில் வரும் செத்தான் என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டு ‛வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என்ற பெயரில் ராம் பாலா ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படமும் இவரின் முந்தைய படங்களான தில்லுக்கு துட்டு 1,2, இடியட் பட பாணியில் காமெடி கலந்த திரில்லர் கதையில் உருவாகிறது. இதில் சந்திரமவுலி நாயகனாக நடிக்க, மீனாக்ஷி, ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி மற்றும் கே.சி.பாலசாரங்கன் இசையமைக்கின்றனர். இதன் படப்பிடிப்பு துவங்கி, வளர்ந்து வருகிறது.