வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.. அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி.. ஓ.பி.எஸ் வரவேற்பு.!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 17-ம் தேதி முடிவடைந்தது எடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செல்லுபடியாகும். இந்த உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே மருத்துவ படிப்புகளில் தொடர்ந்து 70 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறையே தொடரும். 5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு நடைமுறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாமா? என்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதியின்பால் அதிமுக-விற்குள்ள அக்கறைக்கு மற்றுமொரு சான்று என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.