தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர ஜோடியான ராமராஜன் நளினி தம்பதி தற்போது பிரிந்துவிட்ட நிலையில், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நளினி தனது முன்னாள் கணவர் ராமராஜன் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அவரின் தங்கையாக திரையுலகில் அறிமுகமானவர் நளினி. தொடர்ந்து நாயகியாக அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நளினி, கடந்த 1987-ம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்தை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நடத்தி வைத்தார். தற்போது இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற ஒரு மகளும் உள்ள நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு நளினி ராமராஜன் தம்பதி தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிந்துவிட்டனர். ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இன்றுவரை விட்டுக்கொடுக்காமல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இந்தியா க்ளிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த நளினி தனது முன்னாள் கணவர் ராமராஜன் குறித்து பேசியுள்ளார். திருமண வாழ்க்கை குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை நளினி, கூறுகையில்,
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது ராமராஜன் உதவி இயக்குநராக இருந்தார் அப்போதிருந்தே அவர் என்ளை ஒன்சைடாக காதலித்து வந்துள்ளார். அது எனக்கு தெரியாது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்கள் நெற்றியில் குங்குமம் இல்லை கண்டினியூட்டி மிஸ் ஆகுது என்று டைரக்டர் சொல்லும்போது ராமராஜன் குங்குமம் எடுத்து வைப்பார்.
அப்போது ஷூட்டிங் அவசரத்தில் நான் அதை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு நான ஷூட்டிங் வரும்போது ஒரு உடை அணிந்து வருவேன் அப்போது அவர், இது நன்றாக இருக்கிறது. நாளைக்கும் அதையே போட்டுக்கொண்டு வரும்படி சொல்லுவார். எதேர்ச்சையாக அதை போட்டுக்கொண்டு வரும்போது அவர் சொல்லித்தான் போட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வார்.
இப்படியே சென்றுகொண்டிருந்தபோது, ஷூட்டிங்கில் டைலாக் சொல்லிக்கொடுக்கும்போது இடையில் லவ் லெட்டர் கொடுப்பார். அப்புறம் என் உதவியாளரிடம் லெட்டர் கொடுத்துவிடுவார். இப்படி இருந்த அவர் ஒரு சீசனில் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க சென்றார். அப்போது என்னிடம் சொல்வதற்காக ஒய்எம்சிஏ-விற்கு வருகிறார்.
அப்போது அவர் என்னிடம் பேசுவதை பார்த்துவிட்டு, என்னுடன் வந்தவர் என் வீ்ட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டார். உடனடியாக அங்கு எங்கள் வீட்டு ஆட்கள் அவரை அங்கேயே அடித்துவிட்டனர். அப்போது உயிருள்ளவரை உஷா மாதிரி அவர் மீது விழுந்து அழுது கட்டுன இவரைத்தான கட்டிக்குவேனு சொல்லிட்டேன. அதன்பிறகு ஒரு வருடம் நான் சென்னை பக்கமே வரவில்லை மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன்.
இந்த ஒரு வருடத்தில் தேனாம்பேட்டை ஆர்ட்டிஸ்ட்கள் வரும்போது வாணரம்போல் எங்களுக்கு தூதாக இருந்தார்கள். மலையாளப்பட ரீமெக்காக தமிழில் வந்த பாலைவன ரோஜாக்கள் என்ற படத்திற்காக ஒரு வருடம் கழித்து சென்னை வந்தேன். அப்போது தேனாம்பேட்டை ஆர்டிஸ்ட் வந்து பாவம்மா அவர் உனக்காகத்தான் அடியெல்லாம் வாங்கியிருக்கான். இப்போ ஹீரோவா நடிக்கிறாங்க நீ இப்படி ஏமாரத்திட்டீயே என்று சொன்னார்கள்.
அப்பவே என்க்குள்ள பயங்கர செண்டிமெண்ட் ஆகிடுச்சி. அப்போது அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது பாலைவன ரோஜாக்கள் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிக்கான தாய் அவார்டு எனக்கு கொடுத்தாங்க. அப்போ அவருக்கும் சிறந்த புதுமுக நடிகருக்கான தாய் அவார்டு கொடுத்தாங்க
அப்போதான் அவரை ஒரு வருடம் கழித்து பார்க்கிறேன். அப்போது செத்துப்போன காதல் மீண்டும் வளர்ந்தது. அய்யயோ பாவம் எனக்காக அடியெல்லாம் வாங்குனாரு இவரை எப்படியாவது திருமணம் செய்துகொண்டு எங்கள் வீட்டில் உள்ளவர்கள் நோஸ்கட் பண்ணவேணடும் என்று நினைத்தேன்.
அப்போது 6-வது குறுக்குத்தெரு என்ற ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தில் நடித்த பாண்டியன் மதுரை என்பதால் அவரை வைத்து பேசி அப்படியே கல்யாணம் பண்ணதுதான். நாங்கள் பிரிந்துவிடுவோம் என்பது எங்கள் இருவருக்குமே தெரியும்.அதனால் தான் நாங்களே சமரசமாக பிரிந்துவிட்டோம்
அவருக்கு உடம்பு சரியில்ல என்று பல வதந்திகள் பரவி வருகிறது. அதெல்லாம் எதுவுமே இல்ல அவர் நல்லா இருக்காரு. காதல் உண்மையானது. எனக்கு கல்யாணத்திற்கு அப்புறம்தான் காதல் வந்தது. அவருக்கு கல்யாணத்திற்கு முன்பே காதல். அவரு ரொம்ப வெகுளி நல்ல மனுஷன் அதனால அவரை எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கூறியுள்ளார்.