புதுடில்லி,-‘வெப்ப அலை வீசத்துவங்கி உள்ளதால், நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது:குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் சத்தீஸ்கர் வரையிலான வடமேற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய பகுதிகளில், இந்த மாதம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி, தெற்கு ஹரியானா, டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வெப்ப அலைவீசத்துவங்கியுள்ளது தான் இதற்கு காரணம்.டில்லியிலும், கடந்த மாத இறுதி முதல் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பல இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 104 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. ஓரிரு நாட்களில், இது 109 டிகிரியாக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி,-‘வெப்ப அலை வீசத்துவங்கி உள்ளதால், நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.இதுதொடர்பாக வானிலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.