ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
இந்த முக்கிய தகவலை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.
ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் மட்டுமல்லாமல் மொத்த ஏழு பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இதை தெரிவித்துள்ளார்.