நேட்டோவில் இணைவது தொடர்பான நடவடிக்கைளை பின்லாந்து முன்னெடுத்து வரும் நிலையில், அந்த நாட்டின் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதோடு இல்லாமல் பின்லாந்தின் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானங்கள் பறந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களுக்காக பின்லாந்து மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் மட்டுமில்லாமல் பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தும் இருந்தது.
#Ukraine‘s President #Zelensky speaking today to the Parliament of #Finland , trying to muster support for his country’s #war against #Russia .
“This is how Russia protects Donbas” he said, after hundreds were killed in an air attack pic.twitter.com/ORXhc7zQZt
— FRANCE 24 English (@France24_en) April 8, 2022
இந்தநிலையில், பின்லாந்தின் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சில முக்கிய அரசாங்க இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது, இதனால் வழக்கமான நடைமுறைகளுக்காக அரசாங்க இணையதளத்தை பயன்படுத்தும் பயனர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த சைபர் தாக்குதலானது, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பின்லாந்தின் நாடாளுமன்றத்தில் வீடியோ வாயிலாக உரையாற்றிய அதேநேரத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சைபர் தாக்குதலானது, நேட்டோவில் இணைவது தொடர்பான பின்லாந்தின் விண்ணப்பம் மே மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என அந்தநாட்டின் முன்னாள் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்ததை தொடர்ந்து நடத்தப்பட்டு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பின்லாந்தின் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், பின்லாந்தின் தெற்கு துறைமுக பகுதியின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் IL-96-300 போர் விமானம் அத்துமீறி நுழைந்து 3 நிமிடங்கள் வரை நிலைகொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த அத்துமீறிய செயல்களை கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் போலந்தில் இருந்து 2 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளது, மேலும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தநாட்டை சேர்ந்த மூன்றில் ஒருவருக்கு விசா வழங்குவதை இன்று நிறுத்தியது.