இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மூன்று நாள் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.-களிலும் யுபிஐ ஐடி மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறினார்
ஏடிஎம்-களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது குறித்து அறிவித்த சக்திகாந்த தாஸ், “தற்போது ஏ.டி.எம்.-கள் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. யு.பி.ஐ- ஐடியைப் பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கார்டு இல்லாமல் ஏ.டி.எம்.-களில் யுபிஐ ஐடி மூலம் பணம் எடுக்கும் வசதி மூலம், “பண பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு கார்டு இல்லாமல் எடுப்பது, என்பது கார்டு ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் போன்ற மோசடிகளைத் தடுக்க உதவும்” என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
கார்டு இல்லாமல் பணப் பரிவர்த்தனைகள் செய்யும்போது யுபிஐ-இன் பயன்பாடு வாடிக்கையாளர் சரிபார்ப்பை செயல்படுத்துகிறது.
கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுப்பது என்பது, “ வங்கியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படி என்றும் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர பரிவர்த்தனை வரம்பு சற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் மோசடி பரிவர்த்தனைகளை கணிசமாகக் குறைக்கும்.” என்று நிதி பரிவர்த்தனையில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியால், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது, வங்கி வாடிக்கையாளர் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த அமைப்பு தற்போது பல்வேறு வங்கிகளில் உள்ளது. கோவிட்-19 பரவல் தொடங்கியதை அடுத்து பலர் ஏடிஎம்களுக்கு செல்ல தயங்கியபோது இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
பரோடா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் கார்டுதாரர்கள், டெபிட் கார்டு இல்லாமலும், தங்கள் தொலைபேசி மூலம் பணத்தை எடுக்கலாம். கார்டு வைத்திருப்பவர் பெரும்பாலும் மொபைல் பேங்கிங் செயலியைப் பயன்படுத்த வேண்டும். டெபிட் கார்டுகளை வைத்திருக்கவில்லை என்றால், ஏடிஎம்களில் பணத்தை எடுக்க கோரிக்கை செய்ய வேண்டும்.
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை சுயமாக பணம் எடுப்பதற்கு பயன்படுத்தலாம். இருப்பினும், பல வங்கிகளில் இந்த வசதி இன்னும் வரவில்லை. இதில், தினசரி பரிவர்த்தனை வரம்பு உள்ளது. குறிப்பிட்ட வங்கி வழங்கும் வசதிகளின்படி இது ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை வரம்பு உள்ளது.
ஒரு சில வங்கிகள் தற்போது அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் பரிவர்த்தனை கட்டணத்தையும் வசூலிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால், அதன் அட்டைதாரர்களுக்கு இந்த சேவையை வழங்க மேலும் பல வங்கிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த முறை ஏடிஎம் மோசடிகளைத் தடுக்கும். ஏனெனில் இது பணத்தை உருவாக்க மொபைல் பின்னைப் பயன்படுத்துகிறது. கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை யுபிஐ வசதியைப் பயன்படுத்துகிறது. இது உடனடிப் பணப் பரிமாற்றம் மூலம் பணம் அனுப்புபவரால் இந்த சேவை செயல்படுகிறது. இது பயனாளியின் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“