பெங்களூரு: ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும். பன்முகத்தன்மையே இந்தியாவை ஒரே நாடாக வைத்திருக்கிறது; பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் எனவும் கூறினார்.