லாஸ் ஏஞ்சல்ஸ்,
உலகளவில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா உள்ளது.
அந்த நாட்டில் தொற்று தொடங்கியது முதல் இதுவரையில், 1 கோடியே 28 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமியும், அமெரிக்க குழந்தைகள் ஆஸ்பத்திரி சங்கமும் தெரிவித்துள்ளன.
கடந்த 4 வாரங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பில் குழந்தைகளின் பங்கு அங்கு 19 சதவீதமாக உள்ளது.
இதையொட்டி அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி கூறும்போது, “குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கொரோனா தொற்றுநோயின் உடனடி விளைவுகள் இருப்பதை அங்கீகரிப்பது முக்கியம். மேலும், இந்த தலைமுறை குழந்தைகள், இளைஞர்களின் உடல், மனம், சமூக நல்வாழ்வு ஆகியவற்றின் நீண்ட கால தாக்கங்களை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்” என்று குறிப்பிட்டது.