அமெரிக்காவில் உயர்கல்வி இந்தியாவின் பங்கு உயர்வு| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்க குடியேற்ற சேவைகள் துறை, அயல்நாட்டு மாணவர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: அமெரிக்காவில் படிக்க வருவோரில் ஆசிய மாணவர்களின் பங்கு,71.9 சதவீதமாக உள்ளது. இதில், இந்தியா, சீனா நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கடந்த, 2021ல் அமெரிக்காவில் உயர் கல்வி கற்க வந்த சீன மாணவர்கள் எண்ணிக்கை, 2020ம் ஆண்டை விட, 33 ஆயிரத்து 569 குறைந்து, மூன்று லட்சத்து, 48 ஆயிரத்து, 992 ஆக இருந்தது. இதே காலத்தில் அமெரிக்காவில் படிக்க வந்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை, 25 ஆயிரத்து 391 அதிகரித்து, இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 35 சதவீதத்தினர் மாணவியர்.கடந்த ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைகளில் தான் அதிகமான வெளிநாட்டினர் உயர் கல்வி கற்க வந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.