ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றைய தினம் செலுத்தப்படும் என நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறினார்.
ஏப்பிரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி 2 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான 550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.