அதானி குழுமம் கடந்த 5 வருடமாக அதன் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான லாபத்தை அளித்து வருகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தற்போது 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!
மேலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஓரே நாளில் 11வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கும் முன்னேறி 9வது இடத்திற்கு வந்துள்ளார் கௌதம் அதானி.
அதானி குழும முதலீட்டாளர்கள்
இதுமட்டும் அல்லாமல் கௌதம் அதானி சொத்து மதிப்பு உயர்ந்தது போலவே அதானி குழுமம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும் அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளனர்.
அப்படி எந்த நிறுவனம் எவ்வளவு லாபத்தை அளித்துள்ளது தெரியுமா..?
200 பில்லியன் டாலர்
அதானி குழுமம் முதல் முறையாக 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் கொண்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் எலைட் கிளப்பில் நுழைந்தது மார்ச் 7 ஆம் தேதி சாதனை படைத்துள்ளது. இந்த எலைட் கிளப்பில் இருக்கும் மற்ற இரண்டு நிறுவனங்கள் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் மற்றும் டாடா குழுமம்.
அதானி குழுமம்
இந்நிலையில் கடந்த ஒருவருடத்தில் அதானி குழும பங்குகளின் விலை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது, தத்தம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் எந்த அளவிற்கு அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
7 நிறுவனங்கள்
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும் மும்பை பங்குச்சந்தையில் அதானி வில்மார், அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசரஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய 7 நிறுவனங்கள் மட்டுமே உள்ளது.
அதானி வில்மார்
பிப்ரவரியில் பங்குச் சந்தைகளில் அறிமுகமான புதிய நிறுவனம் அதானி வில்மார். ஆனால் குறுகிய காலத்தில் இந்தச் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்துள்ளது. அதானி வில்மார் பங்குகள் அதன் ஐபிஓ விலையில் இருந்து 165 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 79,000 கோடி ரூபாயாக உள்ளது.
அதானி பவர்
2022ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் மின்சாரம் விநியோகிக்கும் அதானி பவர் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்த நிறுவனமாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் அதானி பவர் பங்குகள் 145 சதவீதம் உயர்ந்து மொத்த சந்தை மதிப்பு 94,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
இந்தியாவில் கிரீன் எனர்ஜி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 2022ஆம் அண்டில் மட்டும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் சுமார் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ்
அதானி டோட்டல் கேஸ் தொடர்ந்து வர்த்தகத்தைக் கைப்பற்றித் தனது சேவை அளவீட்டை அதிகரிக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 2022ஆம் ஆண்டில் மட்டும் 48 சதவீதம் அதிகரித்து மொத்த சந்தை மதிப்பு 2.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்
இந்தியாவின் மிகப்பெரிய மின் பகிர்மான நிறுவனமான அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 2022ஆம் ஆண்டில் மட்டும் 43 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் மொத்த சந்தை மதிப்பு 2.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
அதானி குழுமத்தின் பெரும் நிறுவனமாக விளங்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் தொடர்ந்து நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கைப்பற்றி வரும் நிலையில் 2022ஆம் ஆண்டில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 26 சதவீதம் அதிகரித்து மொத்த சந்தை மதிப்பு 2.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ் பங்குகள் 2022ல் மட்டும் சுமார் 16 சதவீதம் உயர்ந்து உள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது மூலம் அதானி போர்ட்ஸ் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று உள்ளது. இந்தப் பங்கு உயர்வின் மூலம் அதானி போர்ட்ஸ் மொத்த சந்தை மதிப்பு 1.79 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
How much Adani Group investors richer in 2022; Adani Group hits $200 bn mcap
How much Adani Group investors richer in 2022; Adani Group hits $200 bn mcap அள்ளி அள்ளி கொடுத்த அதானி.. பண மழையில் முதலீட்டாளர்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா..?