ஏப்ரல் 7 நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்துப் பேசினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போது அவர், “ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைதான் ஏற்க வேண்டுமே தவிர, வேறு மொழிகளை அல்ல” என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார். மேலும், “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கம், அலுவல்
மொழி
அது
இந்தி
மட்டும்தான் என்றார். மாநிலங்களுக்கிடையேயான தொடர்பு மொழியாகவும் இந்திதான் இருக்க வேண்டும் என்றும், தற்போது ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றவர், மாநிலங்கள் பல இந்தியை ஏற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.
சம்பவத்துக்கு வருவோம்…
அண்மையில், திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் சொல்ல ஆரம்பித்தார். குறுக்கிட்ட கனிமொழி எம்பி, “உங்களுக்கும்
ஆங்கிலம்
நன்றாக தெரியும். ஆகவே, ஆங்கிலத்திலேயே பதில் சொல்லலாமே” என்று சொல்ல, பிறகு ஆங்கிலத்தில் பதிலளித்தார் பியூஷ் கோயல்.
அமித்ஷாவின் அறிவிப்பு, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி என நுழைகிறது என்பதை உணர்த்துகிறது அன்றைய சம்பவம், பிறகு ஆங்கிலமே இல்லாமல், இந்தி,
தமிழ்
, இன்னொரு மொழி – அதாவது சமஸ்கிருதம்’ என்று ஆகப்போகிறது” என அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மேலும், “மாநிலங்களுக்கு இடையாயன தகவல் தொடர்புகள் இந்தியிலேயே இருக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். மாநில அரசுகள் அனுப்பும் கடிதத்துக்கு வரும் ஒன்றிய அரசின் பதில்கள் இந்தியில் இருப்பதற்கே எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு சமீபத்தில்கூட, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். உடனே ஆங்கிலத்தில் பதில்கள் வர ஆரம்பித்தன.
இருமொழி கொள்கை தான் – தமிழகம்
இருமொழி கொள்கைதான், தேசத்தை ஒன்றிணைக்கும், ஆகவே இந்தியை திணிக்காதீர் என்பதே அண்ணா முதல் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தெரிவித்துள்ளனர். அப்போது முதல் இப்போது வரை தமிழ்நாட்டு அரசின் கொள்கையாக இருக்கிறது. காரணம், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனி கலாச்சாரம், வாழ்க்கை முறை, மொழி கடைபிடிக்கப்படுகிறது. ஆகவதோன் இந்தியாவை ஒரு தேசமல்ல, ஒன்றியம் என்கிறது இந்திய அரசியல் சாசனம். எனவே இந்தியா போன்ற பரந்து விரிந்த பகுதியில் பல்வேறு சாதி, மத, இன, மொழிகள் உள்ள நாட்டில் அனைத்தையும், அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படை.
வடமாநிலங்களில் பேசப்படுவது இந்தியா?
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைத் தவிர இந்தியா முழுதும் இந்திதானே பேசப்படுகிறது’ என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. வடக்கிலும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், இமாச்சலப் பிரதேசம் போன்றவற்றில் மக்கள் பிற மொழிகளைப் பேசி வருகின்றனர். சமீபத்தில் சில வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட உத்தர்கண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் தனித்தனியே இலக்கியம், இலக்கண, எழுத்துக்களைக் கொண்ட மொழிகளை கொண்டுள்ளன.
ஆனால் தவறாக அல்லது வேண்டுமென்றே, பிற மொழி பேசுவோரையும், ‘இந்தி’ மொழி பேசும் கணக்கில் சேர்ப்பது நடக்கிறது. உதாரணமாக, சந்தாலி மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்கள் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் 2003ம் ஆண்டின் 8வது அட்டவணையில் சந்தாலி மொழிக்கு தனி அலுவல் மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, வட மாநிலங்களில் அனைத்து மக்களுக்கும் இந்திதான் தாய்மொழி என்பதோ இந்தி பேசுகிறார்கள் என்பதோ கற்பிதமே. ஏனென்றால், இங்குதான் இன்றளவும் ஆங்கிலம் கற்றோர், கற்போர் உள்ளனர். இரு மொழிக் கொள்கை அதாவது தமிழ், ஆங்கிலம் என்பது கடைபிடிக்கப்படுகிறது.
அடுத்து வந்த கருணாநிதியும், இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருந்தார். தொடர்ந்த எம்.ஜி.ஆரும் அதே கொள்கையில் உறுதியாக இருந்தார். 1986 நவம்பர் 13ல், இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அதே கருத்துதான் ஜெயலலிதாவுக்கும். தொடர்ந்த எடப்பாடி பழனிச்சாமியும் இதை அறிவித்திருக்கிறார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதையே உறுதிபட உரைத்தார்.
இந்திக்கு எதிப்பு இல்லை!
தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு இருந்ததே இல்லை. சென்னையில் இந்தி பிரச்சார சபாவில் இந்தி மொழி கற்றுத்தரப்படுகிறது. பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் இந்தி பயில்கிறார்கள். ஆனால் திணிப்புக்கு எதிராகத்தான் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஆக, திணிப்பு என்பது பிரச்சினையை ஏற்படுத்தும். இதற்கு கடந்த கால வரலாறு உண்டு.
ஆகவே ஒன்றிய அரசு இந்தி திணிப்பை தவிர்ப்பதே நல்லது.
விமர்சகர் – டிவி சோமு