இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லவிருப்பதாகக் கூறப்படுவது வதந்தி என்றும், அடிப்படையற்றது என்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே மீண்டும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு மனிதநேய உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடல்வழியில் இந்தியாவின் நெருங்கிய நாடாக இலங்கை உள்ளதாகவும், அதனுடனான உறவுகள் இந்திய வெளியுறவுக்கொள்கைப்படி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா சூழலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சிக்காக இலங்கையுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், இலங்கைக்குக் கைம்மாற்றாக அந்நியச் செலாவணி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.