இலங்கையில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைதூளுக்கு சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் இருந்தே, அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிகளவு தேயிலை தூள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், அங்கு தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைகளின் கொள்முதல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.