ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lavrov ஆகியோரின் குடும்பத்தினர் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது, மேலும் ரஷ்ய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியது.
இதைத்தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lavrov குடும்பத்தினர் மீது பிரித்தானியா பொருளாதார தடைகள் விதித்துள்ளது.
ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை.. ஒருபோதும் அடங்காது! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
பிரித்தானியாவில் உள்ள புடினின் மகள்களான Katerina Tikhonova மற்றும் Maria Vorontsova ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், Lavrov மகள் Yekaterina Vinokurova சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனைவரும் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.