வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன் மீதான போரால் தங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு 40 நாட்களுக்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆயுத பலத்தை பொறுத்தவரை ரஷ்யா பெரிய நாடாக இருந்தாலும், அந்நாட்டின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவது, ரஷ்ய படை வீரர்களை எதிர்த்து தாக்குதல் நடத்துவது என உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து திறம்பட போரிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த வாரம் ரஷ்ய எல்லையில் இருக்கும் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
ஆனாலும், தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறுகையில், ‛உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்ய படைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. போரில் ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது எங்களுக்கு ஒரு பெரிய துயரம்’ என்றார்.
Advertisement