என்ன விஜய் FDFS பார்க்க வருவாரா ? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் வளர்ச்சி அனைவரையும் வியக்கவைத்துள்ளது. நடிக்க வந்த புதிதில் விஜய்யைப்போல் எந்த நடிகரும் அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்திருக்க மாட்டார்கள். அதிலும் சில விமர்சனங்கள் அவரை மிகவும் காயப்படுத்தியதாக அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

நடிப்பின் மீது தீரா காதல் கொண்ட
விஜய்
தன் முதல் படத்திலேயே பல கசப்பான அனுபவங்களை சந்தித்தார். இருப்பினும் அதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டிவந்தார் விஜய்.

இதையும் விஜய் கண்டித்தால் நல்லா இருக்கும்…ரசிகர்கள் வேண்டுகோள்..!

கடுமையாக உழைத்த விஜய் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இவரை திரையிலும் நேரிலும் காண கோடான கோடி ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக
பீஸ்ட்
திரைப்படம் வெளியாகவுள்ளது.
நெல்சன்
இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கான முன்பதிவு துவங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிலும் பல வெளிநாடுகளிலும் பீஸ்ட் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்துவருகின்றது. இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கத்தில் விஜய் தன் படங்களின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வருவாரென்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சென்னையில் பிரபல திரையரங்கான காசியில் விஜய் இதற்கு முன்பு பலமுறை தன் படங்களை காண மாறுவேடத்தில் திரையரங்கிற்கு வருவாராம். அவ்வாறு மாறுவேடத்தில் வரும் விஜய்யை ரசிகர்களால் கன்டுபிடிக்கவே முடியாதாம். இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்திற்கும் விஜய் திரையரங்கிற்கு வருவார் என எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.