ஏசி முதல் டைனிங் டேபிள் வரை… மலிவு விலையில் மாதத் தவணை!

பலர் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாறும் சூழல் ஏற்படும். இருப்பினும், வேறு நகரத்திற்கு மாறிய பிறகு, சில முக்கியமான பொருள்கள் தேவைப்படுகின்றன. காரணம் பழைய பொருள்களை அங்கேயே விற்றுவிட்டு வருகின்றனர்.

புதிய வீட்டிற்கு மாறும்போது பல உபகரணங்கள் இல்லாமல் பெரும் துயரத்துக்கு ஆளாகின்றனர். இதையெல்லாம் புதிதாக வாங்க வேண்டும் என்றால், கூடுதல் விலை கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், உடனடியாக வேறு இடங்களுக்கு நகர வேண்டும் என்றால், கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இச்சூழலுக்கு ஏற்ற வகையில், வாடகைக்கு வீட்டு உபயோகப் பொருள்களை கொடுக்கும் செயலிகள் நமக்கு உதவியாக இருக்கின்றன. இந்த தளங்களில் அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருள்களும் குறைந்த மாத வாடகைக்கு கிடைக்கிறது. இதனால், இனி நீங்கள் வீட்டில் ஃபர்னிச்சர் முதல் ஏசி வரை எதுவும் இல்லை என்ற கவலை கொள்ளாமல் இருக்கலாம்.

இப்போது உங்களுடன் பகிரப் போகும் இந்த பிரபல ரென்டிங் ஆப் மூலம் ரூ.59 முதல் வீட்டு உபயோகப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த செயலியின் பெயர் CITY FURNISH. இந்த ஆப் குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!

சிட்டி ஃபர்னிஷ் செயலியின் அம்சங்கள்

வீட்டிற்குத் தேவையான பொருள்களை மலிவான மற்றும் வாடகைக்கு வழங்கும் பல இணையதளங்கள் உள்ளன. இருப்பினும், அத்தகைய வலைத்தளங்கள் அல்லது செயலியின் நம்பகத்தன்மையைப் பார்ப்பது முக்கியம். கூகுள் பிளே ஸ்டோரில் சிட்டிஃபர்னிஷ் ஆப் 4.2 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து இந்த செயலி பயனர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது என்பது தெளிவாத் தெரிகிறது. சிட்டி ஃபர்னிஷ் ஆப்ஸுடன் இணையதளமும் உள்ளது. இந்த இணையதளம் வீட்டு உபயோக பொருள்கள், ஃபர்னிச்சர்களை வாடகைக்கு வழங்குகிறது. இந்த தளத்தில் இருந்து வீட்டில் பயனுள்ள பொருட்களை வாடகைக்கு எடுக்கலாம். இதற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

இந்த தளத்தில் வாடகைக்குக் கொடுக்கப்படும் சாதனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தி பிறகே பயனர்களுக்கு கொடுக்கப்படுகிறது. வீட்டு உபயோக பொருள்கள் மட்டுமென இந்த தளத்தை குறைவாக எண்ணி விட வேண்டாம். லேப்டாப், ப்ளே ஸ்டேஷன் என அனைத்தில் இதில் கிடைக்கிறது.

விஐபி மொபைல் நம்பர் வேண்டுமா – அப்ப இத படிங்க முதல்ல!

முக்கியமாக ஏர் பிரையர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், டிவிக்கள், சலவை இயந்திரங்கள், ஏசி, நீர் சுத்திகரிப்பான்கள், மிக்சர்கள், ஏர் பியூரிஃபையர்கள் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த பொருட்களை வாங்குவதற்கு மாத வாடகை செலுத்த வேண்டும். ஒரு முறை டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். இந்தத் தொகை ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருக்கும். இந்த தொகை பொருள்களை கொடுக்கும்போது, உங்களிடமே திருப்பி செலுத்தப்படும்.

நீங்கள் டெபாசிட் தொகையை செலுத்தியவுடன், அந்த பொருளை வாடகைக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ரூ.59 முதல் வாடகைக்கு பொருள்கள் கிடைக்கிறது. இந்த இணையதளத்தின் மூலம், ஒரே நேரத்தில் நிறைய செலவு செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் சிறிய தொகைக்கு பொருள்களை வாடகைக்கு எடுக்கலாம்.

ரென்டல் ஆப் பயனரா நீங்கள்? உங்கள் கருத்துகளை கீழே பதிவிடவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.