வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஏப்.,10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 10 ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 10ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட தகுதி பெற்றவர்கள். அவர்கள், தனியார் மையங்களில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
அரசு தடுப்பூசி மையங்களில், இலவசமாக நடந்து வரும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி மற்றும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடக்கும். அது துரிதபடுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement